நாமக்கல்: உள்ளாட்சி இடைத்தேர்தலில் 10 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு

நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் 10 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-09-26 04:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள, 25 உள்ளாட்சி பதவிகளுக்கு,  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில், 10 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 பதவிகளுக்கு, 63 பேர் களத்தில் உள்ளனர். வருகிற அக்.9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ள 1 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், 1 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 5 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 18 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 25 பதவிகளுக்கு, மொத்தம் 109 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவற்றில் 5 மனுக்கள் நிராகரிப்பட்டன. 31 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. 2 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 8 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள், போட்டயின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.

தற்போது மீதமுள்ள 15 பதவிளுக்கு வருகிற அக்.9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 1 மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 பேரும், 1 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 பேரும், 3 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 14 பேரும், 10 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 29 பேரும் போட்டியில் உள்ளனர். மொத்தம் 15 பதவிகளுக்கு 63 பேர் களத்தில் உள்ளனர். வேட்பாளர்கள் தங்களின் ஆதரவாளர்களுடன் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News