நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 39,738 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2021-06-12 14:34 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை,  கடந்த வாரம் வரை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 7 நாட்களாக படிப்படியாக எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இன்று ஒரேநாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 39,738 ஆக உயர்ந்துள்ளது. இன்று  794 பேர் சிகிச்சை குணமாகி வீட்டுக்கு திரும்பினர். இதுவரை மொத்தம் 34,724 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 4,668 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று 4 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News