காந்தி பிறந்த நாளில் கதர் துணிகளை வாங்கிய நாமக்கல் பா.ஜ.க.வினர்

மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி நாமக்கல் பா.ஜ.க.வினர் கதர் துணிகளை வாங்கினார்கள்.

Update: 2022-10-02 01:45 GMT

காந்தி ஜெயந்தியையொட்டி நாமக்கல்லில் பாரதீய ஜனதா கட்சியினர் காதி  பொருட்களை வாங்கினார்கள்.

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல்லில் பா.ஜ.க.வினர் கதர் துணி மற்றும் பொருட்களை வாங்கினார்கள்.

இன்று தேச பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா ஆகும். நமது நாட்டின் சுதந்திர போராட்டம் தீவிரமாக நடந்த கால கட்டத்தில் தீவிரவாதம், மிதவாதம் என பல வழிகளில் போராட்டம் நடைபெற்றது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக நோதாஜி சுபாஷ் சந்திர போஸ்  இந்திய தேசிய ராணுவம் என ஒரு படையை தனியாக உருவாக்கி ஜப்பான் உள்ளிட்ட  நாடுகளின் ஆதரவுடன் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.

ஆனால் இவை எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு மகாத்மா காந்தி அஹிம்சை வழி போராட்டத்தை கையில் எடுத்ததார். அவர் எடுத்த இந்த போராட்ட பாதை அந்த கால கட்டத்தில் அதுவரை யாரும் முன்னெடுக்காத ஒரு போராட்ட பாதையாகும். இந்த போராட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியாக அந்த போராட்டத்தின் விளைவாக பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட 15 ம்தேதி சுதந்திரம் வழங்கியது. இதனால் மகாத்மா தேச பிதா என போற்றி புகழப்படுகிறார். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் பிரதமர் உள்பட  நாட்டின் பிரதமர் உள்பட எந்த ஒரு உயர்ந்த பதவியையும் மகாத்மா காந்தி ஏற்க மறுத்துவிட்டார். அதனால் தான் அனைத்து மத்திய மாநில அரசு அலுவலகங்களிலும் மகாத்மா காந்தியின் படம் வைக்கப்பட்டு உள்ளது. காந்தியின் சுய சரிதையான சத்யசோதனை புத்தகம் பகவத் கீதைக்கு நிகரான ஒரு புனித நூலாக போற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காந்தி ஜெயந்தியை பாரதீய ஜனதா கட்சியினரும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். காந்தி ஜெயந்தியை  முன்னிட்டு, பொதுமக்கள் காதி தயாரிப்புகள் வாங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடப்பட்டது.

அதன் அடிப்படையில் காதி தயாரிப்பு பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், பா.ஜ.க. பொருளாதார பிரிவு மாநில துணைத்தலைவர் பழனியப்பன் தலைமையில், நாமக்கல் பஸ் நிலையம் அருகில் உள்ள காதி அங்காடியில், திரளான பா.ஜ.கவினர் கதர் துணிகள் மற்றும் காதி தயாரிப்புகளை வாங்கினார்கள். நாமக்கல் நகர பா.ஜ. தலைவர் சரவணன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்ட துணை தலைவர் முத்துகுமார், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சிலம்பரசன், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் கார்த்தீஸ்வரன் உள்ளிட்ட திரளானவர்கள் இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதே போல் தமிழகம் முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி விழாவை காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

Tags:    

Similar News