அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள் வழங்கப்பட்டன.

Update: 2024-04-25 02:00 GMT

பைல் படம்

ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், மேம்படுத்தப்பட்ட புத்தகங்கள், மாவட்டத்தில் உள்ள, 95 அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.,), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள் (ஐ.ஐ.டி.), பிற மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள், மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களில், இளங்கலை பொறியியல் படிப்பு (பி.இ., டி.டெக்.,) சேர்க்கைக்காக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (முதன்மை ஜே.இ.இ. மெயின்) நடத்தப்படுகிறது.

மேலும், இந்தியாவில் செயல்பட்டு வரும் ஐ.ஐ.டி., நிறுவனங்களில் சேர்க்கைக்கு இந்த ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜே.இ.இ., முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே ஐ.ஐ.டி. நிறுவனங்களில் சேர்த்து படிப்பதற்கு நடத்தப்படும் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில் பங்கு பெற முடியும்.

நாமக்கல் மாவட்டத்தில், மாணவர்களை ஜே.இ.இ. போட்டித்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு உதவும் வகையில், ‘திசா’ ஜே.இ.இ. முதன்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட புத்தகங்கள், அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்க, தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 95 அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணக்கு என, 12 புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைøம் ஆசிரியர்கள், தங்களது பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மூலம், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து புத்தகங்களை பெற்றுச்சென்றனர்.

Tags:    

Similar News