நாமக்கல் மாவட்டத்தில் 2 இடங்களில் கூட்டுறவு மருந்துக்கடை திறப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 2 இடங்களில் கூட்டுறவு மருந்துக் கடைகளை, முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

Update: 2021-12-16 12:45 GMT

வளையப்பட்டியில் கூட்டுறவு சொசைட்டி மூலம் இயங்கும் மருந்துக்கடையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கினார்.

தமிழகத்தில் 70 இடங்களில், கூட்டுறவு மருந்துக்கடைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இதில், நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டி மற்றும் பொத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டி மூலம் 2 மருந்துக்கடைகள் திறந்து வைக்கப்பட்டன.

வளையப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் செல்வக்குமரன், சரக துணைப்பதிவாளர் கர்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News