கரூரில் 5 இடங்களில், 1000 பேருக்கு கொரோனா தடுப்பூசி

கரூரில் 5 இடங்களில் 1000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Update: 2021-06-06 06:00 GMT

கரூரில் இன்று காலை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள  பொதுமக்கள் குவிந்தனர்.

கரூர் மாவட்டத்தில் இன்று  கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்  5 இடங்களில்  பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா வைரஸ் 2 ம் அலை பரவலைை   தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் தமிழக அரசு கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்களுக்களை காப்பதற்காக தடுப்பு ஊசி செலுத்தி வருகிறது.

கரூர் மாவட்டத்தில் இன்று கரூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி மொத்தம் ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 5 இடங்களிலும் அதிக அளவில் பொதுமக்கள் திரண்டு தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தடுப்பூசி செலுத்தும் இடங்களில் காவல் துறையினர் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்குமாறு பொது மக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News