கரூர் மாநகராட்சியான பிறகு முதலாவது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

மின்சாரம், மதுவிலக்கு ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் ஆணையாளர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

Update: 2022-03-02 08:45 GMT

கரூர் மாநகராட்சியில் வெற்றி பெற்ற 48 வார்டு உறுப்பினர்கள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்

கரூர் மாநகராட்சியில் வெற்றி பெற்ற 48 வார்டு உறுப்பினர்கள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாநகராட்சியில் 42 திமுக வேட்பாளர்கள், 2 அதிமுக வேட்பாளர்கள், 1 காங்கிரஸ், 1 சி.பி.எம், 2 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு இன்று பதவி பிரமாணம் செய்யும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் எல்.ஈ.டி பலகை வைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வை ஏராளமான பொது மக்கள் கண்டுகளித்தனர்.

Tags:    

Similar News