/* */

ஜெருசலேம் புனித பயணத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு: விருதுநகர் ஆட்சியர் தகவல்

விருதுநகர் மாவட்டம் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு தமிழக அரசின் ரூ.37000/- நிதி உதவி வழங்கும் திட்டம்.

HIGHLIGHTS

ஜெருசலேம் புனித பயணத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு: விருதுநகர் ஆட்சியர் தகவல்
X

விருதுநகர் மாவட்டம் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு தமிழக அரசின் ரூ.37000/- நிதி உதவி வழங்கும் திட்டம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துப் பிரிவு கிறித்துவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு, தமிழக அரசால் மானியமாக நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வந்த தொகை ரூ.20000/- த்திலிருந்து ரூ37000/- ம் ஆக உயர்த்தி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

பனிதப்பயணம் மேற்கொள்ள விரும்பும் கிறித்துவர்கள் அதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளமுகவரியிலும் படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள்:

1. விண்ணப்பதாரர் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் வசிக்கும் கிறித்துவ மதத்தவராக இருத்தல் வேண்டும்.

2. 1.7.2021 தேதியில் குறைந்தபட்சம் ஓராண்டு செல்லத்தக்க (One Year Validity) பாஸ்போர்ட் உடையவராக இருத்தல் வேண்டும்.

3. விண்ணப்பிக்கும் போது வெளிநாடு பயணம் மேற்கொள்ளுவதற்கு எவ்விதமான வில்லங்கங்களும் (Encumbrances) இருத்தல் கூடாது.

4. வெளிநாடுகளில் புனித பயணம் மேற்கொள்வதற்கு மருத்துவ மற்றும் உடற்தகுதி (Medical & Physical Fitness) பெற்றவராக இருத்தல் வேண்டும்.

5. இப்பயணம் மேற்கொள்வதற்காக ஏற்படும் செலவினத்தில் அரசு வழங்கும் நிதி உதவி ரூ.37000/- நீங்கலாக மீதமுள்ள தொகையை செலுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும்.

6. ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க கூடாது.

7. ஒரு குடும்பத்தில் விண்ணப்பதாரரையும் சேர்த்த அதிகபட்சம் 4 நபர்கள் பயணம் மேற்கொள்ளலாம். இதில் 2 வயது நிறைவடைந்த 2 குழந்தைகளும் இருக்கலாம். இப்பயணத்தில் 70 வயது நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன் அவருக்கு துணையாக அவர் விரும்பும் ஒரு நபரை மேற்படி நிபந்தனைகளைக்குட்படும்பட்சத்தில் அவருடன் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

8. பயனாளிகள் மாவட்ட வாரியாக கிறித்துவ மக்கட்தொகையின் அடிப்படையில் கணினி மூலம் குலுக்கல் (Lot Systems) முறையில் கூர்ந்தாய்வு குழுவினரால் (Screening Committee) தெரிவு செய்யப்படுவர். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் மட்டுமே இப்புனித பயணம் மேற்கொள்ள வேண்டும்.

9. இப்புனித பயணத்திற்கான காலம் மற்றும் பயண நிரல் ஜெருசலேம் புனித பயணக்குழுவால் முடிவு செய்யப்படும்.

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தகவல் மற்றும் புனிதப்பயணம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் விவரம் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Nov 2021 11:15 AM GMT

Related News