வந்தவாசி பகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் ஆய்வு

வாக்கு சாவடிகளில் ஆய்வு மேற்கொண்ட டிஆர்ஓ பிரியதா்ஷினி
மக்களவைத் தேர்தலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி ஆய்வு மேற்கொண்டாா்.
வந்தவாசி நகராட்சி பகுதியில் 24 வார்டுகளில் ஏற்கனவே 25 வாக்கு சாவடி மையங்கள் இருந்தன. 1500 வாக்காளர்களுக்கு அதிகமாக இருந்தால் அதனை இரண்டு வாக்கு சாவடிகளாக பிரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில்,
பதட்டமான வாக்கு சாவடிகளை ஆய்வு மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வந்தவாசி அடுத்த செம்பூர் கிராமத்தில் உள்ள வாக்கு சாவடி மையத்தையும் தொடர்ந்து, வந்தவாசி நகராட்சி ஆர்.சி.எம் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்கு சாவடி மையங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் வாக்காளர் விபரங்களை கேட்டு அறிந்தார் . அப்போது நாலாவது வார்டு பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் வாக்கு அளிக்கும் மையத்தில் 1523 வாக்குகள் இருந்ததால் உடனடியாக இரண்டு வாக்கு சாவடிகளாக அருகருகே அமைக்க வேண்டும் என நகராட்சி உதவி தேர்தல் அலுவலர் சிவகுமாருக்கு டிஆர்ஓ உத்தரவிட்டார்.
தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த சாய்த்தளம் இன்னும் சற்று தாழ்வாக அமைக்க வேண்டும், அந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸாரிடம் கேட்டறிந்தாா்.
இந்த நகராட்சியில் ஏற்கனவே 25 வாக்கு சாவடிகள் இருந்தது தற்போது 1500 க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள நான்காவது வார்டு ஆர் சி எம் உயர்நிலைப்பள்ளி வாக்கு சாவடி மையம் எட்டாவது வார்டு வாக்கு சாவடி மையமான ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாக்குச்சாவடி மையத்தில் கூடுதலாக இரண்டு வாக்கு சாவடிகளாக பிரிக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது தேர்தல் துணை தாசில்தார் சதீஷ்குமார், காவல் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், நகராட்சி உதவி தேர்தல் அலுவலர் பிச்சாண்டி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu