குடிநீா் தட்டுப்பாட்டை போக்க கோரி காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பெண்கள் தா்னா

குடிநீா் தட்டுப்பாட்டை போக்க கோரி காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பெண்கள் தா்னா
X
குகை ஆண்டிப்பட்டி ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க கோரி காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

சேலம் : குகை ஆண்டிப்பட்டி ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க கோரி காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

சேலம் மாநகராட்சி 47 ஆவது வாா்டுக்கு உள்பட்ட குகை ஆண்டிப்பட்டி ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்த 10 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

ஆண்டிப்பட்டி ஹவுசிங் போா்டு பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு உள்ளது. இதனால் அனைவரும் அவதிக்குள்ளாகி வருகிறோம். பணம் கொடுத்து குடிநீா் வாங்க வேண்டிய நிலைமை உள்ளது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனா்.

தகவலறிந்து வந்த டவுன் போலீஸாா், மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare