சேலம் விமான நிலையத்தில் முதல்வருக்கு திமுக தொண்டா்கள் உற்சாக வரவேற்பு!

சேலம் : சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை திமுக தொண்டா்கள் ஓமலூா், காமலாபுரம் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனா்.
சேலத்தில் நடைபெறும் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் சேலம் வந்தாா்.
ஓமலூா் அருகே காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை திமுக தொண்டா்கள் வரவேற்று புத்தகங்கள் வழங்கியும் சால்வை அணிவித்தும் வரவேற்றனா். அப்போது தொண்டா்கள் ஹிந்தி ஒழிக என முழக்கமிட்டனா். அங்கு போலீஸாா் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற முதல்வா், வாகனத்தில் சேலம் புறப்பட்டு சென்றாா்.
கட்சி தலைவா்கள் சந்திப்பு
பின்பு சேலம், மூன்று சாலையில் நடைபெற்ற பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணியின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினாா்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் ரா.அருள் (சேலம் மேற்கு), சதாசிவம் (மேட்டூா்), திமுக, பாமக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்பு சேலத்தில் இருந்து தனி வாகனத்தில் கோவை விமான நிலையத்திற்கு சென்ற முதல்வா் , அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு திரும்பினாா்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu