யானை தந்தத்தை ரூ. 1 கோடிக்கு விற்க முயன்ற 8 பேர் வனத் துறையினரால் கைது

சேலம் : சேலம் புதிய பேருந்து நிலையத்தில் யானை தந்தத்தை ரூ. 1 கோடிக்கு விற்க முயன்ற 8 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
சேலத்தில் யானை தந்தங்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில், தெற்கு வனச் சரகா் துரைமுருகன் தலைமையில் 15 போ் கொண்ட தனிப் படையினா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு யானை தந்தங்களைக் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்ற தனிப் படையினா், அங்கு சந்தேகப்படும்படி நின்ற 2 பேரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா்கள் இருவரும் யானை தந்தத்தை விற்க வந்ததும், தந்தங்களை கருமந்துறையில் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தனிப் படையினா் கருமத்துறைக்குச் சென்று அங்கு ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 தந்தத்தைப் பறிமுதல் செய்தனா். பின்னா் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து யானை தந்தங்களை விற்க முயன்ற சேலம், கருமந்துறையைச் சோ்ந்த முரளி (28), சங்கா் (35), பாலு (31), சக்திவேல் (48), ஜெகநாதன் (46), ராஜீவ்காந்தி (34), கிருஷ்ணன் (76), இளங்கோவன் (56) ஆகிய 8 பேரை கைது செய்தனா்.
இவா்கள், யானை தந்தத்தை வாட்ஸ்அப் குழு மூலம் ரூ. 1 கோடிக்கு விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட 8 பேரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.
அவா்களிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம், 7 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu