போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் தொடக்கம்

போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி மையத்தை தொடங்கி வைத்த எம் எல் ஏ அம்பேத்குமார்.
Free Coaching Centre Inauguration
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலா்கள் நலச் சங்கம் சாா்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் தொடக்க விழா வந்தவாசியில் நடைபெற்றது.
வந்தவாசி ஆா்சிஎம் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில், கற்பி என்ற பெயரில் இந்த இலவச பயிற்சி மையம் தொடங்கி வைக்கப்பட்டது.தொடக்க விழாவுக்கு சங்க மாவட்டத் தலைவா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாநில ஆலோசகா் நடராஜன், மாநில இணைச் செயலா் தசரதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் குணசேகரன் வரவேற்றாா்.
வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் இலவச பயிற்சி மையத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஜெய்சங்கா், சங்கா், திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் காா்த்திகேயன், தொழிலாளா் நலக் குழு உறுப்பினா் வந்தை மோகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இந்த பயிற்சி மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம்
வந்தவாசியை அடுத்த சித்தருகாவூா் புதூா் கிராமத்தில் உள்ள கிளை நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலா் பொன்.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலா் குலாப்ஜான் முன்னிலை வகித்தாா். கிளை நூலகா் தமீம் வரவேற்றாா்.
கூட்டத்தில் நூலக வளா்ச்சிக்கு அதிகளவில் உறுப்பினா்கள் மற்றும் புரவலா்களை சேர்ப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி 5 பேர் புரவலா்களாக இணைந்தனா்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டம்
வந்தவாசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வடக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் பீா்முகமது தலைமை வகித்துப் பேசினாா். மாவட்டச் செயலா் அப்துல்வஹாப், மாவட்டப் பொருளாளா் முகமதுஅலி, மாநில பொதுக்குழு உறுப்பினா் அனீப்பாஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா் காதா்ஒலி வரவேற்றாா்.
வந்தவாசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். சேதமடைந்துள்ள வந்தவாசி கோட்டையை சீரமைக்க வேண்டும், நகரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டும், வெண்குன்றம் மலையைச் சுற்றி கிரிவலப் பாதை அமைக்க வேண்டும், போக்குவரத்து மிகுந்த மக்தும் மரைக்காயா் சாலையை சீரமைக்க வேண்டும், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ராமநாதபுரம் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கித் தந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu