/* */

பளுதூக்குதல் முதன்மை நிலை மைய பயிற்சியில் சேர மாணவர்களுக்கு வேண்டுகோள்

Weightlifting Game -பளுதூக்குதல் முதன்மை நிலை மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

பளுதூக்குதல் முதன்மை நிலை மைய பயிற்சியில் சேர மாணவர்களுக்கு வேண்டுகோள்
X

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ்

Weightlifting Game - திருவண்ணாமலை மாவட்டத்தில் பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில்

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையத்தில் பள்ளிகளில் 9-ம் மற்றும் 11-ம் வகுப்புகள், கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு, பன்னாட்டு, தேசிய சீனியர் பிரிவில் பதக்கம் வென்று கல்லூரி படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் தகுதியின்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

எனவே இந்த விளையாட்டு மையத்தில் தங்கி பயிற்சி பெற விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தினை ஆன்லைனில் பூர்த்தி செய்தல் வேண்டும். விண்ணப்பப் படிவத்தினை ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) கடைசி நாளாகும்.

மேலும் 2022-23-ம் ஆண்டில் வேலூர் சத்துவாச்சாரி பளுதூக்கும் முதன்மை நிலை மையத்திற்கு மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுப்பதற்கான மாநில அளவிலான தேர்வுகள் வருகிற 11-ந்தேதி காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 04175-233169 என்ற தொலைபேசியில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 30 Sep 2022 5:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு பேபியே..எங்கள் செல்லமே பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு சின்னக் கண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    மீண்டும் 2011ஐ உருவாக்கி விடாதீர்கள் : கேரளாவிற்கு விவசாயிகள்...
  4. அரசியல்
    எதிர்க்கட்சியை என் எதிரியாக கருத வேண்டாம் : பிரதமர் மோடி
  5. ஸ்ரீரங்கம்
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
  7. நாமக்கல்
    விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை...
  8. தமிழ்நாடு
    பத்திரப்புதிவு துறையில் நிலம் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி...
  9. ஈரோடு
    ஈரோட்டில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி
  10. சினிமா
    தக் லைஃப் படத்துக்காக... திரிஷாவின் புகைப்படங்கள் வைரல்..!