/* */

திருவண்ணாமலையில் பூ மார்க்கெட் தற்காலிக இடமாற்றம்

திருவண்ணாமலை பூ மார்க்கெட் தற்காலிகமாக காந்திநகர் பைபாஸ் ரோடு நகராட்சி மைதானத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் பூ மார்க்கெட் தற்காலிக இடமாற்றம்
X

திருவண்ணாமலை தற்காலிக பூ மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகில் ஜோதி பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது . இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாலை கட்டி விற்பனை செய்து வந்தனர். இங்கு கடைகள் அருகருகே நெருக்கமாக உள்ளதால், சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் மலர்களை வாங்கிச் செல்ல போதுமான வசதி இல்லாமல் இருந்துவந்தது.

இதனை நேற்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் அதனை உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, ஜோதி மார்க்கெட் மூடப்பட்டு அங்கு கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் ரோடு நகராட்சி மைதானத்தில் தற்காலிக பூமார்க்கெட்டாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று காலை முதல் பூ மார்க்கெட் திருவண்ணாமலை பைபாஸ் ரோடு நகராட்சி மைதானத்தில் செயல்படத் தொடங்கியது. அங்கு சென்று பொதுமக்களும் , சிறுவியாபாரிகளும் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். பூ மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Updated On: 12 Jan 2022 1:56 AM GMT

Related News