/* */

திருவண்ணாமலையில் மாநில உரிமை மீட்பு பரப்புரை பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாநில உரிமை மீட்பு பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் மாநில உரிமை மீட்பு பரப்புரை பொதுக்கூட்டம்
X

திராவிடர் கழகம் சார்பில் மாநில உரிமை மீட்பு பரப்புரை மாபெரும் பொதுக்கூட்டம் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் முதல் சென்னை வரை நடைபெறும் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு பரப்புரை மாபெரும் பொதுக்கூட்டம் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். திராவிடர் கழக நிர்வாகிகள் இரா.குணசேகரன், தஞ்சை இர.ஜெயக்குமார், வி.சடகோபன், ஊமை.ஜெயராமன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ஏழுமலை வரவேற்றார்.

பொதுக்கூட்டத்தில் வேலூர் மண்டல செயலாளர் பி.பட்டாபிராமன், தலைமை பேச்சாளர் இராம.அன்பழகன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், தொடக்க உரை நிகழ்த்தினார்.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும்பயணம் ஏன்? என்ற புத்தகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டு பேசினார். மேலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில மீட்பு பரப்புரைக்காக, நாகர்கோவில் முதல் சென்னை வரை நடைபெற்ற பரப்புரை குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., தி.மு.க. மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சீனி.கார்த்திகேயன், திராவிடர் கழக பிரசார செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி உள்பட திராவிடர் கழகம், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தி.க. மாவட்ட அமைப்பாளர் காமராஜ் நன்றி கூறினார்.

Updated On: 16 April 2022 1:07 AM GMT

Related News