/* */

முதல்வர் பிறந்த நாள் விழா: 30 குழந்தைங்களுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு அமைச்சர் தங்க மோதிரம் அணிவித்தார்.

HIGHLIGHTS

முதல்வர் பிறந்த நாள் விழா: 30 குழந்தைங்களுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு
X

குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்த அமைச்சர்

தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு அமைச்சர் தங்க மோதிரம் அணிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1 அன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, கலந்துகொண்டு 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பரிசு பொருட்களை வழங்கினார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவிற்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமை வகித்தார்.

கழக மருத்துவர் அணி துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், மாவட்ட கழக நிர்வாகிகள் பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி பிரபு அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவில் கலந்துகொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து புத்தாடை மற்றும் பழங்கள் அடங்கிய பரிசு பைகளை வழங்கினார்.

விழாவில் மருத்துவ கல்லூரி முதல்வர் ஹரிகரன், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பாலசுப்பிரமணியன், நிலைய மருத்துவர் மருத்துவர் கதிர், மற்றும் மருத்துவர்கள் யுவராஜன், வனிதா, வெங்கடேசன், மகப்பேறு தலைமை மருத்துவர் அருமைக்கண்ணு, தொமுச பேரவை செயலாளர் சௌந்தர்ராஜன், ஆறுமுகம், மாவட்ட அமைப்பாளர்கள் நேரு, ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர்கள், கலைவாணி , பரிமளா கலையரசன், நகர நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 March 2024 2:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  5. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    Redmi Buds 5A: இசைப் பிரியர்களுக்கான சிறகுகள்
  9. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  10. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு