/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா தொடங்கியது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா
X

வரவேற்புரை ஆற்றிய பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ஆறுமுகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செய்யாறு, செங்கம் வட்டார அளவில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கின.

திருவண்ணாமலை, தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத் திருவிழாவுக்கு, மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) காளிதாஸ் தலைமை வகித்தாா்.

மாவட்ட உதவித் திட்ட அலுவலா் சத்யா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சின்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் வரவேற்றாா்.

திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினா் அண்ணாதுரை, மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு கலைத் திருவிழா போட்டிகளை தொடங்கிவைத்துப் பேசினா்.

தமிழ்நாடு தடகள சங்க மாநிலத் துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் மாணவர்களிடையே பேசியதாவது;

இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலமாக மிகத் திறன்பட மாணவ மாணவிகளை கொண்டு செல்வதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அதேபோல் கல்வி மட்டுமல்லாமல் மாணவர்களின் தனித்திறனை வளர்த்துக் கொள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவ மாணவிகளை தேர்வு செய்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்து கலைத்திறனை ஊக்குவித்து வருகிறார்.

நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டார அளவிலான போட்டிகளில் கலைத் திருவிழா சங்கமிப்போம் சமத்துவம் படைப்போம் என்ற அடிப்படையில்

6 முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிலும் 2,850 பேர், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 1,856 பேர், 11 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 1,420 பேர் என மொத்தம் 6,126 பேர், என 67 பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளீர்கள், உங்கள் அனைவரையும் வாழ்த்தி பாராட்டுகிறேன் என வாழ்த்தி பேசினார்.

விழாவில், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இல.சரவணன், பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயக்குமாரி, வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்கள் வெங்கடேசன், தண்டபாணி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொது) ஹெலன்கிரேஸி, தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 19 Oct 2023 2:12 AM GMT

Related News