/* */

தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி

தென்பெண்ணை ஆறு மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி
X

தென்பெண்ணை ஆற்றில் எழுந்தருளியா அண்ணாமலையார்

தமிழர்களின் நாகரிகங்கள் ஆற்றங்கரையோரங்களில் தொடங்கியது என்பதற்கு சான்றாக காணும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து ஆற்று திருவிழா நடைபெறுவது வழக்கம் .

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஏராளமான தீர்த்தவாரிகள் நடைபெறும். தை மாதம் மட்டும் முதல்நாள் தாமரை குளத்தில் தீர்த்தவாரியும், பெளர்ணமி நாளில் ஈசானிய குளத்தில் தீர்த்தவரியும் , மேலும் ஒரு தீர்த்தவராக தை மாதம் 5ம் தேதி தென்பண்ணை ஆற்றிலும், அமாவாசை ஏழாவது நாள் ரத்தசப்தமியில் செய்யாற்றிலும் தீர்த்தவாரி நடைபெறும். சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமான தை மாதத்தில் முதல் ஐந்து நாட்கள் புனித நதிகளான கங்கை , யமுனா ,சரஸ்வதி ,கோதாவரி ,நர்மதை போன்ற நதிகள் தட்சிண பினாகினி என்று சொல்லப்படும் தென்பண்ணை ஆற்றில் கலப்பதாக ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் ஐந்தாவது நாள் அண்ணாமலையார் அம்பாளுடன் அண்ணாமலையார் கோவிலின் தெற்கு திசையில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை வழியாக ஓடும் தென்பண்ணை ஆற்றில் தீர்த்தவாரியில் கலந்து கொள்வார். அப்போது அப்பகுதியில் உள்ள கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளுடன் செல்வார்.

அதன்படி நேற்று தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கலந்து கொண்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

மேலும் கீழையூர் வீரட்டானேஸ்வரர், ஏரிக்கரை மூல இரட்டை விநாயகர், அரகண்டநல்லூர் நாகேஸ்வரர் சுவாமிகள் ஆகியோர் எழுந்தருளினர்.

மனம் பூண்டி கிராம பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் விக்னேஷ்வர் பூஜை, கலச பூஜை, பஞ்ச சாசன பூஜை, விசேஷ திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது.

பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா அபிஷேகம் நடைபெற்றது .அப்போது பக்தர்கள் அனைவரும் சிவபுராணம். நமச்சிவாய மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது ஆற்றுதிருவிழாவில் திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி ,கடலூர் , மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது. இத் திருவிழாவை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர் . திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

Updated On: 20 Jan 2024 3:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  2. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    கருப்பு பேரீச்சம்பழம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு...
  5. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  6. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  7. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  8. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  9. குமாரபாளையம்
    ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு
  10. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை