திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்
X

மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி,ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன் ஆகியோர்  நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் ஊராட்சியில் கடந்த மாதம் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 314 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை செய்து 180 மனுக்கள் ஏற்கப்பட்டது.

இந்நிலையில் ராதாபுரம் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இம்முகாமில் வட்டாட்சியர் பரிமளா, சமுதாய பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சுகுணா, ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு குமார், துணை வட்டாட்சியர் செந்தில்குமார் வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சேத்துப்பட்டு அடுத்த அல்லியந்தல் கிராமத்தில் நடைபெற்ற பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் சேத்துப்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் குமாரவேல் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி சசிகுமார், மண்டல வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வருவாய் ஆய்வாளர் ஹேமலதா அனைவரையும் வரவேற்றார்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்து உடனடியாக வழங்கக்கூடிய பட்டாக்களை 10 பேருக்கு அதே இடத்தில் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் 30 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து விரைவில் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

Tags

Next Story