கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.18.39 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
ஈரோடு : ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,191 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் கிலோ குறைந்தபட்சமாக ரூ.45.15-க்கும், அதிகபட்சமாக ரூ.62.15-க்கும், சராசரியாக ரூ.53.35-க்கும் ஏலம் போனது.மொத்தம் 362 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.18 ஆயிரத்து 542-க்கும் விற்பனையாயின.
தேங்காய்ப் பருப்பு 233 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் முதல்தரம் கிலோ குறைந்தபட்சமாக ரூ.133.99-க்கும், அதிகபட்சமாக ரூ.143.39-க்கும், சராசரியாக ரூ.142.39-க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக ரூ.92.01-க்கும், அதிகபட்சமாக ரூ.138.99-க்கும், சராசரியாக ரூ.124.10-க்கும் ஏலம் போனது.
மொத்தம் 9,933 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ.12 லட்சத்து 64 ஆயிரத்து 909-க்கு விற்பனை ஆனது.
எள் 66 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனா். வெள்ளை ரகம் கிலோ ரூ.110.99-க்கும், அதிகபட்சமாக ரூ.117.99-க்கும், சராசரியாக ரூ.116.19-க்கும் ஏலம் போனது.
மொத்தம் 4,882 கிலோ எடை கொண்ட எள் ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 54-க்கு விற்பனையானது.
மொத்தமாக தேங்காய், தேங்காய்ப் பருப்பு, எள் ஆகியவை ரூ.18 லட்சத்து 39 ஆயிரத்து 505-க்கு விற்பனையாயின.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu