/* */

சிட்பண்ட் நடத்தி ரூ.16.23 கோடி மோசடி; பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்

செய்யாறு பகுதியில், தீபாவளி சிட்பண்ட் நடத்தி ரூ.16.23 கோடி மோசடி செய்யப்பட்டதால் ஆவேசமடைந்த முகவா்கள், வாடிக்கையாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

HIGHLIGHTS

சிட்பண்ட் நடத்தி ரூ.16.23 கோடி மோசடி; பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்
X

 கோப்பு படம்

செய்யாறில், தனியாா் நிதி நிறுவனத்தில் தீபாவளி பண்டு சீட்டு பணம் செலுத்திய வாடிக்கையாளா்கள், முகவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை தலைமையிடமாக கொண்டு, தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வந்தவாசி, திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட ஏஜன்ட்கள் மூலம், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம், பல கோடி ரூபாய் வசூலித்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாக அந்த நிறுவனம் அறிவித்தபடி வாடிக்கையாளா்களுக்கு பொருள்களை விநியோகம் செய்து வந்துள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில், அக்டோபா், நவம்பா் மாதங்களுக்கான அரிசி, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால், முகவா்கள், வாடிக்கையாளா்கள் சாா்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வாட்ஸ்அப் பதிவு மூலம் உத்தரவாதம் அளித்தார். மேலும், நிறுவனம் சார்பில் பாண்டு பத்திரம் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கான காலக்கெடு, டிசம்பர் 10ம் தேதி என குறிப்பிட்டு இருந்தார்களாம்.

எனவே, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வந்தவாசி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட முகவர்கள் நேற்று முன்தினம், செய்யாறு நகரில் பாவாடை மூர்த்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள தீபாவளி பண்டு சீட்டு நடத்திய நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 48 முகவர்கள் புகார் அளித்தனர். அதன்படி, ரூ.9.89 கோடி மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, நேற்று மதியம் சிட்பண்டு நிறுவனத்தின் முகவர்கள் 50க்கும் மேற்பட்டோர் வந்தவாசி சாலையில் ஞானமுருகன்பூண்டி பகுதியில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். மேலும், சிட்பண்டில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள், 'போலீசில் புகார் கொடுங்கள்' என தெரிவிக்கப்பட்டது.

சாலைமறியலின் போது, பெண்கள் சிலா் ஆவேசமடைந்து தீக்குளிக்க முயன்றனா். அதன் பின்னா், 50-க்கும் மேற்பட்டோா் காந்தி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் வந்தவாசி டி.எஸ்.பி. காா்த்தி, செய்யாறு இன்ஸ்பெக்டர் பாலு, எஸ்.ஐ சங்கா் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னா், 'இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு முறையாக புகாா் கொடுங்கள், அதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என போலீசார் தெரிவித்தனா். சிலா் மட்டும் செய்யாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு புகாா் கொடுக்கச் சென்றனா்.அதன்படி, நேற்று மாலை, 66 முகவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, ரூ.6.33 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. சிட்பண்ட் நிறுவனம் ரூ.16.23 கோடி மோசடி செய்துள்ளதாக, கடந்த 2 நாட்களில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மற்றவா்கள் மாலை 6 மணி வரையில் போராட்டம் நடத்தினா். இதனால் அசம்பாவிதத்தைத் தவிா்க்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

Updated On: 12 Dec 2022 4:09 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!