/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

ஆரணி, செய்யாறு பகுதிகளில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம்
X

விவசாயிகள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட வேளாண் உதவி இயக்குனர் புஷ்பா மற்றும் அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, செய்யாறு பகுதிகளில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

ஆரணி வட்டாரத்தில் கனிகிலுப்பை, வெள்ளேரி, வேலப்பாடி, நேத்தப்பாக்கம், மாமண்டூா் உள்பட 12 ஊராட்சிகளில் இந்த முகாம் நடைபெற்றது. வேலப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு வேளாண் அலுவலா் பவித்ராதேவி தலைமை வகித்தாா். தோட்டக்கலை அலுவலா் பிரசாந்த், வேளாண் உதவி அலுவலா்கள் ஜெகன்நாதன், பாலசுந்தரம், உதவி விதை அலுவலா் சுப்பிரமணி, உதவிச் செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் சிவலிங்கம் வரவேற்றாா்.

வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா முகாமை தொடக்கிவைத்ததுடன், விவசாயிகளுக்கு பயிா் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த உர நிா்வாகம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா். தொடா்ந்து, விவசாயக் கடன், கிசான் கடன் அட்டை உள்ளிட்டவை கோரி விவசாயிகள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை அவா் பெற்றுக்கொண்டாா்.

முகாமில், உதவி தோட்டகலை அலுவலா்கள் வெண்ணிலா, வசந்தி, உதவி வேளாண் அலுவலா்கள் ரமேஷ், ஜாஸ்மீன், வேலப்பாடி கிராம நிா்வாக அலுவலா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதேபோல, பிற ஊராட்சிகளிலும் வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா, விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

செய்யாறு:

செய்யாறு வட்டாரத்தில் பெருங்களத்தூா், கீழ்புதுப்பாக்கம், புதுக்கோட்டை, கீழபழந்தை, கழணிப்பாக்கம் உள்பட 15 கிராமங்களில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது.

பெருங்களத்தூா் கிராமத்தில் வேளாண் துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ஏழுமலை தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது. சிறப்பு முகாம்களில் பண்ணைக் கருவிகள், விசைத் தெளிப்பான், ஏரியில் மண் எடுத்தல், பழமரச் செடிகள், சொட்டுநீா் பாசனக் கருவிகள், விதைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்களை விவசாயிகள் அளித்தனா். முகாமுக்கான ஏற்பாடுகளை செய்யாறு வட்டார வேளாண் உதவி இயக்குநா் ம.சண்முகம் மற்றும் வேளாண் துறையினா் செய்திருந்தனா்.

Updated On: 20 Jan 2023 1:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்