/* */

திருப்பூரில் சிறுவனை கடத்திய கேரள வாலிபர், துாக்கு போட்டு தற்கொலை

திருப்பூரில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில் சிறுவனை கடத்திய கேரள வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருப்பூரில் சிறுவனை கடத்திய கேரள வாலிபர், துாக்கு போட்டு தற்கொலை
X

திருப்பூரில் இருந்து, கேரளாவுக்கு கடத்தப்பட்ட சிறுவனை போலீசார் மீட்டனர். 

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த சொர்ணபுரி என்கிளேவ், மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). இவரது மனைவி கவிதா (40). இவர்களது மகன் அஜய் பிரனவ் (14) அணைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன். சிவக்குமார், வீடுகள் கட்டி தரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ராகேஷ் (30) என்பவர், சிவக்குமாருடன் சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு இருந்துள்ளது. இதுகுறித்து, கடந்த மாதம் பெருமாநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராகேஷ், தனது நண்பர் ஒருவருடன் முகமூடி அணிந்தபடி சிவக்குமாரின் வீட்டிற்கு வந்தார். அங்கிருந்த சிவக்குமாரிடம், தனக்கு தர வேண்டிய பணத்தை கொடுக்குமாறு ராகேஷ் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனக்கு ரூ.5 கோடி கொடுக்க வேண்டும், இல்லையென்றால் உனது மகனை கடத்தி விடுவேன் என்று ராகேஷ், சிவக்குமாரை நிர்பந்தித்துள்ளார். இதில் வாக்குவாதம் முற்றவே, திடீரென ராகேஷ் தனது நண்பருடன் சேர்ந்து சிவக்குமார் மற்றும் அவருடைய மனைவியின் கை, கால்களை கட்டி போட்டு வாயில் டேப் ஒட்டினர். அந்த நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அஜய் பிரனவ்வை கத்தியை காட்டி மிரட்டி, ராகேஷின் சொந்த ஊரான கொல்லத்துக்கு கடத்தி சென்றுவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து கட்டுகளை அவிழ்த்து, வெளியே ஓடி வந்த கவிதா சத்தம் போட்டுள்ளார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் அங்குவந்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் கந்தர்மணி தலைமையிலான தனிப்படை போலீசார் கொல்லத்திற்கு விரைந்தனர்.

அங்கு பறையூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ராகேஷின் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கிருந்த அஜய் பிரனவ்வை மீட்டு பாதுகாப்பாக திருப்பூருக்கு அழைத்து வந்தனர். இதனிடையே சிறுவனை கடத்திய ராகேஷ், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலில் ஏற்பட்ட கொடுக்கல்- வாங்கல் பிரச்சினை காரணமாக சிறுவனை கடத்தியதால், ராகேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் மற்றும் கொல்லம் பறையூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Sep 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?