/* */

குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் குறித்த உயர் அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம்

நெல்லை மாநகராட்சியில் குடிநீர் மேம்பாட்டுப்பணிகள் குறித்து மாநகராட்சி மேயர், ஆணையாளர் விஷ்ணுசந்திரன் ஆகியோர் ஆய்வு

HIGHLIGHTS

குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் குறித்த உயர் அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம்
X

திருநெல்வேலி மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் குறித்த உயர் அலுவலர்களுடன் ஆணையாளர் விஷ்ணுசந்திரன் முன்னிலையில் நடந்த ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் குறித்த உயர் அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் பொருட்டு நகரின் 20 கி.மீ. தொலைவில் உள்ள அரியநாயகிபுரம் அணைக்கட்டு பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறும் திட்டப்பணியினை ரூ.295 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வேலை ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

திட்டப்பணியின் முன்னேற்றம் குறித்து இன்று திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில், துணை மேயர் கே.ஆர்.ராஜு மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ப.விஷ்ணுசந்திரன் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில், மாநகரப் பொறியாளர் என்.எஸ்.நாராயணன், உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, லெனின், பைஜீ, இராமசாமி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ஆர்.கணேஷ்குமார், உதவி நிர்வாக பொறியாளர் டேனிஸ் மற்றும் மேற்படி திட்டப்பணியினை மேற்கொண்டு வரும் மெசர்ஸ் அன்னை இன்ப்ரா டெவலப்மெண்ட் நிறுவனத்தை சார்ந்த ஒருங்கிணைப்பாளர் தாணுலிங்கம் மற்றும் பொறியாளர்கள் ரவீந்திரன், பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணியினை முழுமையாக விரைந்து முடித்திடுமாறு மேயர், துணை மேயர் மற்றும் ஆணையாளர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

Updated On: 22 April 2022 12:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?