/* */

குடியரசு தின அலங்கார ஊர்தி: நெல்லையில் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு

குடியரசு தின அலங்கார ஊர்திக்கு நெல்லை மாவட்ட எல்லையான உத்தமாபாண்டியன்குளத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

HIGHLIGHTS

குடியரசு தின அலங்கார ஊர்தி: நெல்லையில் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு
X

குடியரசு தின அலங்கார ஊர்திக்கு நெல்லை மாவட்ட எல்லையான உத்தமாபாண்டியன்குளத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தியினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தி வரவேற்றார்கள்.

இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் பொதுமக்கள், இளைய தலைமுறையினர், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர்கள் கண்டுகளித்திட ஏதுவாக காட்சிப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.

அதன்படி, தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி மாவட்ட எல்லையான உத்தமபாண்டியன்குளம் கிராமத்திற்கு வருகை புரிந்த வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தியினை சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் ஆகியோர் மலர்தூவி வரவேற்று பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-

இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பினை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற குடியரசு நாள் விழா கொண்டாட்டத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் 3 அலங்கார ஊர்திகள் இடம்பெற்றிருந்தன.

இந்த அலங்கார ஊர்தியின் முகப்பில் தமிழகத்தில் வேலூர் கோட்டையில் 1806ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சி, ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர் புரிந்த மருது சகோதரர்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலு நாச்சியார், வீரமங்கை வேலுநாச்சியாரின் போர்படையில் பெண்கள் படைக்கு தலைமையேற்று வெள்ளையர்களின் ஆயதக்கிடங்கினை அழித்து தன்னுயிரை தியாகம் செய்த வீராங்கனை குயிலி, பரங்கியரின் ஆதிக்கத்திற்க்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்ததோடு, ஆங்கிலேயர்களின் ஆட்சியினை எதிர்த்து முதன்முதலில் தீரமாய் போரிட்டும் தூக்கு கயிற்றினை வீரமுடன் ஏற்றுக்கொண்ட விடுதலைப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன், அவரது படையில் தளபதியாக விளங்கிய தூத்துக்குடி மாவட்ட கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், அன்னியப்படைகளை தனியாக சென்று அழித்த நெற்கட்டும்செவல் பிறப்பிடமாகக் கொண்ட ஒண்டிவீரன், இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன்முதலாக வீர முழக்கமிட்ட நெற்கட்டும்செவல் மாவீரன் பூலித்தேவன், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதைத் தடுத்த கட்டாலங்குளம் மன்னர் மாவீரன் அழகுமுத்துக்கோன், வெள்ளையர்களை எதிர்த்து தீரமாய்ப் போரிட்டு, தூக்கிலிடப்பட்ட மாவீரர்கள் மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார்கோயில் கோபுரம் உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிரோட்டமாக காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் நாட்டுப்புற இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது தெரிவித்தார். இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி திருநெல்வேலி மாவட்ட எல்லையான உத்தமபாண்டியன்குளம் கிராமத்திற்கு வருகை புரிந்தபோது பொதுமக்கள், இளைய தலைமுறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர்கள் திரளானோர் வரவேற்று பார்வையிட்டனர்.

Updated On: 3 Feb 2022 10:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு