/* */

என் ஜி ஓ நியூ காலனி மக்கள் நலச்சங்கம் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாநகராட்சி, பெருமாள்புரம் ஆரம்ப சுகாதார நிலையம், என்ஜிஓ நியூ காலனி நலச்சங்கம், இணைந்து நடத்தும் கொரோனா கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்.

HIGHLIGHTS

என் ஜி ஓ நியூ காலனி மக்கள் நலச்சங்கம் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்
X

மாதிரி படம் 

திருநெல்வேலி மாநகராட்சி, பெருமாள்புரம் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் என்ஜிஓ நியூ காலனி நலச்சங்கம், இணைந்து நடத்தும் கொரோனா கோவிஷீல்டு தடுப்பூசி போடும் முகாம் நாளை (24.07.2021) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு என்ஜிஓ நியூ காலனி பூங்கா (அந்தோணி பலசரக்கு கடை எதிரில் உள்ள தெரு) ஜவகர் நகர் பகுதியில் நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்...

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த முகாமில் நேரில் வருகை தந்து முதலாவது தடுப்பூசி மற்றும் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆதார் கார்டு கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். முக கவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளி கடைபிடிப்பது அவசியம். தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி நடந்து கொள்ள கேட்டு கொள்ளவேண்டும். கட்டாயமாகக் காலை உணவு சாப்பிட்டு விட்டு வர வேண்டும்.

கோவிஷீல்டு தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாவது (84 நாட்கள் முடித்தபின்) டோஸ் போடப் படும். முகாமில் அனைவரும் முக கவசம். அணிந்தும் வரிசையாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்வதுடன் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்ட பணியாளர்கள் சேவைக்கு இடையூறு செய்ய வேண்டாம். நம் பகுதி அனைத்து நலச் சங்க நிர்வாகிகளும் தங்களது பகுதியில் தடுப்பூசி போடாதவர்களை முகாமிற்கு அனுப்பி வைப்பதுடன், தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும். அவசியம் என உலக சுகாதார அமைப்பு, மற்றும் நம் நாட்டின் சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் அவர்களும் தனது அறிவிப்பில் உறுதி செய்து உள்ளார்கள். ஜவகர் நகர்,புதிய காலனி பகுதியில் நடைபெறும் தடுப்பூசி முகாமை பொது மக்கள் பயன் படுத்தி கொள்ள கேட்டு கொள்கிறோம் .என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Updated On: 23 July 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?