/* */

கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கேட்டுஇசைக் கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு

நெல்லையில் கொரோனா நிவாரண உதவி வழங்கக்கோரி இசைவாத்தியங்களுடன் இசைக்கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

HIGHLIGHTS

கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கேட்டுஇசைக் கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு
X

கோவில்களில் திருவிழாக்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று மேளதாளம் முழங்க தவில் இசைக்கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொற்றில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.

கோவில்களில் வழிபாடுகளை மேற்கொள்ள இன்று முதல் அனுமதி அளிக்கப் பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கோவில் திருவிழாக்கள் நடத்தப்படாமல் இருப்பதன் காரணமாக நாட்டுப்புற கலைகள், மேள தாளம், இசை வாத்தியம், வில்லிசை கலைஞர், கணியான் கூத்து கலைஞர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உதவும் வகையில் கிராம கோவில்களில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் தங்களது இசை நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். மேலும் தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் மேற்படிப்பு செலவிற்கு அரசு உதவித்தொகை வழங்குவதோடு, ஊரடங்கு காலம் முடியும் வரை குடும்ப பராமரிப்பு நிதியாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அரசின் அனைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும் போது தங்களது கலைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு வாய்ப்புகளை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் மேளதாளம், இசை வாத்தியங்கள், வில்லிசை ஆகியவற்றை அரங்கேற்றம் செய்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Updated On: 5 July 2021 8:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?