/* */

வாக்கு எண்ணும் மையங்கள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு

இரண்டு கட்ட வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் மொத்தம் 9524 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்

HIGHLIGHTS

வாக்கு எண்ணும்  மையங்கள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு
X

வாக்கு எண்ணும் மையங்களை  நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார்

நெல்லை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் ஜெயகாந்தன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் 12 உறுப்பினர் பதிவு இடங்களுக்கும், 122 யூனியன் கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 204 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி இடங்களுக்கும், 1730 ஒரு கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர் ,பாளையங் கோட்டை, பாப்பாக்குடி 5 யூனியனுக்கும், அக்டோபர் 6ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவும், நாங்குநேரி ,ராதாபுரம், மற்றும் வள்ளியூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது .

நெல்லை மாவட்டத்தில் உள்ள 2069 உள்ளாட்சி பதவிகளுக்கு 6871 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆயிரத்து 244 பேரும், 1731 வார்டு உறுப்பினர் பதவிக்கு 4713 பேரும், 122 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 836 பேரும், 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 78 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை மையங்களை நெல்லை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்டனர். பொன்னாகுடியில் உள்ள ரோஸ் மேரி கல்லூரியில் ஆய்வு செய்தனர். அங்கு வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு வாக்குப் பெட்டிகளை சேகரிப்பு அறை, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதி கியவற்றை ஆய்வு செய்தனர்.

முதல்கட்ட தேர்தல் 621 வாக்குப்பதிவு மையங்களிலும், இரண்டாம் கட்டமாக 565 வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு மையங்களில் 5013 வாக்குப்பதிவு அலுவலர்களும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின்போது 4111 வாக்குப்பதிவு அலுவலர்கள் என 9 ஆயிரத்து 524 வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ளனர். இதுதவிர அவசர தேவைகளுக்காக வரிசைப் பட்டியலில் இருக்கும் ஊழியர்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 600 அரசு அலுவலர்கள் தேர்தல் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் வருகிற 24-ஆம் தேதி தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்காக 1500 காவலர்கள் ஈடுபடுத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.

Updated On: 23 Sep 2021 4:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...