/* */

நெல்லையப்பர் திருக்கோவிலில் பரணி தீபம் : ஏற்றம் பக்தர்கள் தரிசனம்

தீப திருவிழாவை முன்னிட்டு, நெல்லையப்பர் திருக்கோவில் மணி மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

HIGHLIGHTS

நெல்லையப்பர் திருக்கோவிலில்  பரணி தீபம் : ஏற்றம்   பக்தர்கள் தரிசனம்
X

தீப திருவிழாவை முன்னிட்டு, நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் , பரணி தீபம் ஏற்றப்பட்டது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2 நாட்கள் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருகார்த்திகை தீபத்திருவிழா நெல்லையப்பர் சுவாமி சன்னதி மஹாமண்டபத்தில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வுடன் தொடங்கியது.

இந்த விழாவிற்காக நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி சன்னதி மணிமண்டபத்தில் 4 அடி உயரத்திற்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பரணி மஹா தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி நெல்லையப்பர் சன்னதியில் இருந்து தீப சுடர் எடுத்து வரப்பட்டு அரோகரா கோசத்துடன், நேற்று பரணி மஹா தீபம் ஏற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து பரணி தீபத்திற்கு மஹா தீபாரதனை நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 19ம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட பரணி தீபம், ரிசப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளும், சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுடன் ஊர்வலமாக தலையில் சுமந்து எடுத்து வரப்பட்டு, சுவாமி சன்னதி தெரு முகப்பில் வைக்கப்பட்டு ருத்ர தீபம் எனப்படும் சொக்கப்பனையில் ஏற்படும்.

Updated On: 19 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  2. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  3. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  4. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  7. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!