/* */

கோடகநல்லூரில் ஆகாய தாமரை மறுசுழற்சி மையம்: ஆட்சியர் துவக்கி வைப்பு

கோடகநல்லூரில் நெல்லை நீர்வளம் திட்டம் சார்பில் ஆகாய தாமரை மறுபயன்பாட்டு செய்யும் மையத்தினை ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

கோடகநல்லூரில் ஆகாய தாமரை மறுசுழற்சி மையம்: ஆட்சியர் துவக்கி வைப்பு
X

கோடகநல்லூரில் நெல்லை நீர்வளம் திட்டம் சார்பில் ஆகாய தாமரை மறுபயன்பாட்டு செய்யும் மையத்தினை ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்து பார்வையிட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர் ஊராட்சியில் ஆகாயத்தாமரை மறுபயன்பாட்டு செய்யும் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர் ஊராட்சி சி.ஆர் காலனியில் நெல்லை நீர்வளம் திட்டம் சார்பில் ஆகாயத்தாமரை மறுபயன்பாட்டு செய்யும் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு இன்று (13.04.2022) தொடங்கி வைத்து பார்வையிட்டு தெரிவித்ததாவது:-

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை நீர்வளம் என்ற திட்டம் சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறது. நீர் பாதுகாப்பில் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் நெல்லை நீர் வளம் கூட்டமைப்பை துவங்கப்பட்டு பொதுமக்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைய இணைத்து நீர் பாதுகாப்பில் கவனம் செலுத்தி மாவட்டம் முழுவதும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏரிகள் புத்துயிர் பெறுவது இதில் ஒரு பகுதியாகும். வி.எம்.சத்திரம், உடையார்பட்டி, மூலிகுளம், தாமரைக்குளம்- பெரியகுளம், பேட்டை அமைப்பு குளங்கள் புத்துயிர் அளிக்கப்பட்டு வருகின்றன. ஒரு பொதுவான பிரச்சினை ஆகாயத்தாமரையின் பரவலான வளர்ச்சியாகும். இந்த ஆகாயத் தாமரை அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான நிலையான தீர்வை எட்ட ஆகாய தாமரையின் மறுபயன்பாட்டு மையத்தை மாவட்ட நிர்வாகம் மூலம் நிறுவப்பட்டுள்ளது.

ஏரிகளில் இருந்து சேகரிக்கப்படும் ஆகாய தாமரையை இனி குப்பை கிடங்குகளுக்கு அனுப்பாமல் நடுகல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தனிப்பயனாக்கப்பட்ட ஆகாய தாமரையை மறுபயன்பாட்டு மையத்திற்கு கொண்டு செல்லப்படும். சேகரிக்கப்பட்ட ஆகாய தாமரையை தோட்டங்களில் பயன்படுத்த உரமாகவும், காகிதம் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற மூன்று வகையான மறுபயன்பாட்டு பொருட்கள் தயாரிக்கப்படவுள்ளது. ஆகாயத்தாமரையை சேகரித்து நடுகல்லூரில் உள்ள மறுசுழற்சி மையத்திற்கு கொண்டு வரப்பெற்று மூன்று இயரந்திரங்கள் மூலம் தனித்தனியாக கூழாக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படவுள்ளது.

இப்பணிகளை செய்வதற்கு நடுகல்லூர்-கொடகநல்லூரைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிகுழுவினர், மற்றும் இப்பகுதி இளைஞர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு இத்திட்டம் உடனடியாகத் செயல்ப்படுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக 15,000டன் ஆகாயத்தாமரை மறுபயன்பாடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வேற்று தாவரத்தை இயற்கை வளமாக மாற்றுவது மற்றும் உள்ளுர் வேலைவாய்ப்பை உருவாக்குவது இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாகும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். தொடர்ந்து சுத்தமல்லியில் மகளிர் சுயஉதவிகுழுக்கள் மூலம் நடத்துவதற்கு ரூ.5 இலட்சம் மதிப்பிலான ஆவின் விற்பனை நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மகளிர் திட்ட, திட்ட இயக்குநர் சாந்தி, ஆவின் மேலாளர் சுந்தரவடிவேல், உதவி மேலாளர்கள் சாந்தி, அனுசாசிங், திருநெல்வேலி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், நடுகல்லூர் ஊராட்சிமன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, என்வர்மன்டல் பவுன்டேசன் ஆப் இந்தியா அருண்கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 April 2022 8:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?