/* */

ஆதரவற்றவர்களுக்கு மாநகர உதவி துணை ஆணையர் உதவினார்.

ஆணையர் ஸ்ரீனிவாசன் பரிவுடன் பாட்டியிடம் நலம் விசாரித்து உணவருந்த செஞ்சார்.

HIGHLIGHTS

ஆதரவற்றவர்களுக்கு மாநகர உதவி துணை ஆணையர் உதவினார்.
X

தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு மாநகர துணை ஆணையர் உதவி ஆணையாளர் உணவு உடை வழங்கினார்

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்... நெல்லையில் யாருடைய ஆதரவுமின்றி சாலைகளில் சுற்றி திரிபவர்களை மீட்டு மாநகராட்சி சார்பாக கல்லணை பள்ளியில் வைத்து பராமரித்து வருகின்றனர்.. இவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது

உணவுகளோடு நிறுத்தி விடாமல்... இவர்களது நிலையை கண்டு மனமிறங்கிய தன்னார்வல அமைப்புகள் களத்தில் இறங்கியதன் விளைவாக இன்று மனநோயாளிகளும் , ஆதரவற்றவர்களும், முதியவர்களும் புதிய மனிதர்களாக காட்சியளிக்கிறார்கள்..

கல்லணை பள்ளியில் முதலில் அனைவருக்கும் முடி திருத்தம் செய்தது சோயா என்ற அமைப்பு..பின்னர் அவர்கள் உயிரை காக்கும் விதமாக கொரானா தொற்று பரிசோதனையும் நடத்தப்பட்டது,

அதை தொடர்ந்து மாநகர காவல்துறையுடன் கரம் கோர்த்து இறங்கிய ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் சங்கம்.. தொடர்ந்து உணவுகள் வழங்கியது மட்டுமல்லாமல் நேற்று அவர்களுக்கு தேவையான... ஆடைகள், உள்ளாடைகள், படுத்து உறங்க போர்வைகள், துண்டுகள் என சோப்பு, பேஸ்ட் , பிரஷ் என அனைத்து பொருட்களையும் வழங்கி நெகிழ வைத்துள்ளது

இவற்றை மாநகர காவல் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் மற்றும் காவல் உதவி ஆணையர் சதிஷ் குமார் ஆகியோர் வழங்கினர்

காவல் துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் அங்கிருந்த மூதாட்டி ஒருவருடன் பரிவுடன் விசாரித்து உணவருந்த செய்ததும் அனைவரது மனதையும் தொட்டது.


மேலும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க புதிய பாத்திரங்களும் வழங்கப்பட்டது.. இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர் இராமேஸ்வரி, லயன்ஸ் சங்க பட்டைய தலைவர், லயன் R மணிகண்டன், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்

போலி அந்தஸ்து, கவுரவம் என சொந்த உறவுகளை கூட கண்டுகொள்ளாத இந்த காலகட்டங்களில்.. தெருவில் சுற்றி திரிபவர்கள் மீது எவ்வித எதிர்பார்ப்புமின்றி கருணையுடன் அனுகும் தன்னார்வல அமைப்புகளின் பணி பாராட்டுக்குரியது

Updated On: 18 May 2021 2:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!