/* */

கூகுள்பே மூலம் பணப்பட்டுவாடா ! தேர்தல் ஆணையம் கண்காணிப்பு

கூகுள்பே மூலம் பணப்பட்டுவாடா ! தேர்தல் ஆணையம் கண்காணிப்பு
X

வாக்காளர்களுக்கு கூகுள்பே உள்ளிட்ட தளங்கள் மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறதா என தடுப்பு தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, தேர்தலை அமைதியாக நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தேர்தல்ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட தனியார் செயலிகள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் நடைபெற இருப்பதாகத் தெரிகிறது. பல இடங்களில் வாக்காளர்களின் செல்போன் எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு, 'கூகுள் பே' மூலம் பணம் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற பணப்பரிமாற்றங்களை தடுப்பதற்காக வங்கி பணியாளர்கள், சைபர் கிரைம் போலீஸார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.இது போன்று ஆப்கள் மூலம் பணம் அனுப்பப்பட்டால் அதை ஒரு ஆதாரமாக எடுத்து வழக்குப்பதிவு செய்யலாம் என்று போலீஸாருக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Updated On: 5 March 2021 11:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?