/* */

காவல்துறை , துணை ராணுவபடை கொடி அணிவகுப்பு

காவல்துறை , துணை ராணுவபடை கொடி அணிவகுப்பு
X

திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் தலைமையில் தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல தாழையூத்திலிருந்து தொடங்கி தென்கலம் விளக்கு, சங்கர்நகர் பாலம், ராஜவல்லிபுரம் இரயில்வே கேட், மற்றும் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக வந்து தாழையூத்து பேருந்து நிறுத்தத்தில் நிறைவு பெற்றது.

இதேபோல் கொடி அணிவகுப்பு மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யூனியன் அலுவலகத்தில் தொடங்கி மானூர் பஜார் மற்றும் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மானூர் பேருந்து நிறுத்தத்தில் நிறைவு பெற்றது. கொடி அணிவகுப்பில் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அரச்சனா, எல்லை பாதுகாப்பு படை துணை தளபதி நரேந்திரன், தாழையூத்து இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை, மானூர் இன்ஸ்பெக்டர் ராமர், சப்இன்ஸ்பெக்டர்கள், மற்றும் அஸ்ஸாம் மாநில எல்லை பாதுகாப்பு படையினர் 64 பேர், மற்றும் 40 உள்ளூர் போலீசார் உட்பட 104 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது மாவட்ட எஸ்பி., பேசுகையில், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பதட்டமான பகுதிகளில் நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் அச்சமின்றி அவர்களது ஜனநாயக கடமையாற்றுவதற்கும், அமைதியாக தேர்தலை நடத்துவதற்கும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்றும், பொதுமக்கள் யாரும் பணம் அல்லது பொருட்களை வாங்கிகொண்டு வாக்களிக்க வேண்டாம், நேர்மையான முறையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.

Updated On: 2 March 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  4. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  9. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  10. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!