/* */

நெல்லையப்பர் கோவிலில் ராகுல்காந்தி சாமி தரிசனம்

நெல்லையப்பர் கோவிலில் ராகுல்காந்தி சாமி தரிசனம்
X

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசித்தி பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து திருநெல்வேலியில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக கோவில் முன்பு மேள தாளங்களுடன் ராகுல் காந்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் டவுணில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருநெல்வேலியை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல்காந்தி கலந்து கொள்ள உள்ளார்.

Updated On: 28 Feb 2021 10:15 AM GMT

Related News