/* */

திருச்சி காவிரி பாலம் பழுதுபார்ப்பு பணி தொடர்பாக பா.ம.க. கேள்வி

திருச்சி காவிரி பாலம் பழுதுபார்ப்பு பணி தொடர்பாக பா.ம.க. மாநில பொருளாளர் கேள்வி எழுப்பி உள்ளார்.

HIGHLIGHTS

திருச்சி காவிரி பாலம் பழுதுபார்ப்பு பணி தொடர்பாக பா.ம.க. கேள்வி
X

திருச்சி காவிரி பாலத்தில் இன்று பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா கட்சி நிர்வாகிகளுடன் ஆய்வு செய்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் திலிப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் கவிஞர் திலக பாமா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட பொறுப்பாளராக நியமனம் கடிதம் பெற்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடினார்.

மேலும் திருச்சி பகுதியில் முக்கிய பிரச்சினைகளை ஆராய்ந்து உடனடியாக தீர்வு காண்பதற்கு வழிவகை செய்ய வேண்டும், தமிழகத்தில் அரசு பள்ளிகள் பல மாவட்டங்களில் மூடப்பட்டு வருவதாகவும் உடனடியாக கல்வித்துறை அமைச்சர் இதனை கருத்தில் கொண்டு ஏழை மாணவிகளின் கல்வியினை சீர்குலைக்காமல் அவர்கள் கற்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிறகு திலக பாமா காவிரி பாலத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் திருச்சியையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவேரி பாலத்தின் பழுது பார்ப்பு பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதால் திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் மக்களும், ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி மாநகருக்கு பல்வேறு வேலைகள் தொடர்பாக பயணிக்கும் மக்களும் அன்றாடம் மிகுந்த சிரமத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பழைய இரும்பு பாலத்தை விரைவாக சீர்செய்து இருசக்கர வாகனம் மட்டும் செல்லும்படி தயார் செய்து கொடுக்கவேண்டும்.

மற்றும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 9.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பழுதுபார்த்ததாகவும் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கிட்டத்தட்ட 17 கோடி ரூபாய்க்கு செய்த பணிகள் என்ன என்பதை விளக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் இப்படி மாறி மாறி செலவு செய்து கொண்டு இருப்பது நியாயமா? இத்தனை கோடி செலவு செய்யும் அளவுக்கு பாலம் பழுதாகி விட்டதா, இல்லை பொய் கணக்கு காட்டி அதிகாரிகள் சுருட்டி வருகிறார்களா என்பதை மக்களுக்கு வெட்டவெளிச்சமாக கொண்டு வரவேண்டும் என்றும் கூறினார்.

காவிரி பாலத்தை திலகபாமா ஆய்வு செய்த போது பாலத்தை ஆய்வு செய்த போது பா.மக.க. நிர்வாகிகள் ஏழிழரசன், வினோத்குமார், ஏர்போர்ட் செந்தில்குமார், பிரசாத், சக்தி, ரபிக் பாய், ஹரிகரன், அய்யப்பன், முருகானந்தம், செந்தில், வீரமணி, மார்கெட் முரளி, ஜெகதீசன் மற்றும் மகளிர் அணியினர் உடன் இருந்தனர்.

Updated On: 7 Dec 2022 2:26 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  2. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  3. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  6. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  7. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!
  8. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  9. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  10. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!