/* */

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமில் கலெக்டர் ஆய்வு

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமில் கலெக்டர் ஆய்வு
X

திருச்சி அருகே திருச்செந்துரை கிராமத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இதனை வெளியிட்டார். திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்காளர் விவரம் மற்றும் மாவட்டத்தின் மொத்த வாக்காளர் விவரம் அதில் இடம் பெற்று இருந்தது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள் அனைத்து தாலுகா அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், அனைத்து மாநகராட்சி கோட்ட அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் தொடர்பாக சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. முத்தரசநல்லூர்மற்றும் திருச்செந்துறை ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட தோ;தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் இன்று (12.11.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முகாம்களை பார்வையிட்ட பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2023-ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும் 2023 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் 09.11.2022 முதல் 08.12.2022 வரை நடைபெறவுள்ளது. இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் 09.11.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

01.01.2023 அன்று 18 வயது நிரம்பியவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வயது மற்றும் இருப்பிடத்திற்குரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, புதியதாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். அயல்நாடு வாழ் இந்திய வாக்காளர்கள் படிவம் 6ஏ-இல் நேரடியாகஇணைய வழியில் வாக்காளர் பதிவு அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். வாக்காளரது பெயரினை நீக்கம் செய்திட படிவம்-7-யும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்ய வேண்டியிருப்பின் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் சிறப்பு முகாம் நடைபெறும் நாள் அன்று சம்மந்தப்பட்ட வாக்கு சாவடி நிலை அலுவலாpடம் படிவம்-6பி-யில் விண்ணப்பித்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக்கொள்ளலாம்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இன்று (12.11.2022) நடைபெற்றது போல் நாளையும் (13.11.2022); மேலும் 26.11.2022 (சனி) மற்றும்; 27.11.2022 (ஞாயிறு) ஆகிய தேதிகளிலும்; அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. ஆகவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் குணசேகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Nov 2022 1:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!