/* */

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் :- வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் பனிந்திர ரெட்டி, ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் :- வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு
X

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் பனிந்திர ரெட்டி, ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் பனிந்திர ரெட்டி, இன்று (29.05.2021) ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்தும், இதில் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள், ஐ.சி.யு. படுக்கை வசதிகள் குறித்தும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையங்கள், சித்த மருத்துவ கொரோனா பாதுகாப்பு மையங்கள் குறித்தும் அரசு மற்றும் இங்குள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், திரவ ஆக்சிஜன் வழங்குவது குறித்தும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழு குறித்தும் தெரிவித்தார்கள்.

மேலும், தினசரி எடுக்கப்படும் ஆர்டிபிசிஆர் டெஸ்ட் குறித்தும், கொரோனா பாதிப்பு குறித்தும், காய்;ச்சல் முகாம்கள் மற்றும் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்தும், கிராமப்பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் தடுப்பூசி போடுவது குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார்.

இக்கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் பனிந்திர ரெட்டி பேசுகையில்:- ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளை விரைiவுப்படுத்த வேண்டும். குறிப்பாக மில் தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசிகளை விரைந்து போட வேண்டும். வீட்டு தனிமையில் உள்ள கொரோனா தொற்று உள்ளவர்களை மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் கண்காணிக்க வேண்டும்.

சித்த மருத்துவ முறையில் கரோனா பாதுகாப்பு மையம் செயல்படுவதை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுவரை சித்த மருத்துவ சிகிச்சை கொரோனா பாதுகாப்பு மையத்தில் 30 சதவிதம் உள்ளனர். இதை அதிகப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தடுப்பூசிகளும் தேவையான அளவில் பெற்று போட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து கரோனா பரவுவதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார் ரூம்மை வருவாய் நிர்வாக ஆணையர் பனிந்திர ரெட்டி, பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி, சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 May 2021 1:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?