/* */

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்..!

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்..!
X

தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஜூன் 15) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி நகர் மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி அருகேயுள்ள அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (15ம் தேதி) செவ்வாய் கிழமை காலை 10:00 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், திரேஸ்புரம், பூபால்ராயபுரம், லூர்தம்மாள்புரம், அலங்காரதட்டு, மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளபட்டி, தருவைகுளம், பட்டிணமருதூர், பனையூர், மேலமருதூர், அ.குமாரபுரம் மற்றும் அனந்த மட பச்சேரி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

மேலும், தூத்துக்குடி நகர் வடக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட திரேஸ்புரம் உயரழுத்த மின்பாதையில் கம்பிகளின் தரம் உயர்த்தும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திரேஸ்புரம் பூபாலராயர்புரம். மாணிக்கபுரம். குரூஸ்புரம், சங்குகுளிகாலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர் காலனி, வெற்றிவேல்புரம், முத்து கிருஷ்ணா புரம். ராமர் விளை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 12மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Updated On: 14 Jun 2021 4:54 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்