/* */

தூத்துக்குடி மாநகராட்சி-ஜூன் 14 ம் தேதி சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள்.

தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை (ஜூன் 14ம் தேதி) சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் : ஆணையாளர் சரண்யா அரி அறிவிப்பு!!

HIGHLIGHTS

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூன் 14ம் தேதி நாளை நடைபெற இருக்கும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை ஆணையாளர் சரண்யா அரி அறிவித்துள்ளார்.

அதன்படி, காலை 9 மணி முதல் 11 மணி வரை கதிரேசன் கோவில் தெரு, கேவிகே நகர் பகுதியிலும், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை டி.ஆர்.நாயுடு தெரு - சிஎம் ஸ்கூல், அண்ணாநகர் 3வது தெரு மெயின் பகுதியிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை காந்திநகர் தொம்மையார் கோவில் அருகில், தாதோதர நகர் ஜிம் தெரு ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.

பொதுமக்கள் இம்முகாம்களில், காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தனிமைப்படத்தப்பட்டவர்களின் வீடுகளில் உள்ள மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளைப் பாதுகாப்பான முறையில் மாநகராட்சி சுகாதார ஊழியர்களால் சேகரிக்கப்பட்டு தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 13ம் தேதி இன்று புதிதாக 289 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் உயிரிழப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றின் தாக்கமானது குறைந்த நிலையில், இன்று புதிதாக 289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 52,365 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா தொற்றிலிருந்து 1023 பேர் குணமாகி வீடு திரும்பியதை தொடர்ந்து இதுவரை 48,398 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மாவட்டத்தில் 3619 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 5 பேர் உயிரிழப்பு. இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 348 ஆக அதிகரித்துள்ளது.

Updated On: 13 Jun 2021 3:50 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்