/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் : ஆட்சியர் அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு 01.04.2021 முதல் 09.07.2021 முடிய மொத்தம் 6,405 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் : ஆட்சியர் அறிவிப்பு.
X

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (10ம் தேதி) கொரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு 01.04.2021 முதல் 09.07.2021 முடிய மொத்தம் 6,405 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக 10.07.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திருச்செந்தூர் - அரசு பொது மருத்துவமனை, காயல்பட்டினம், சாத்தான்குளம் - பூச்சிக்காடு ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

மேலும், அந்தோணியார்புரம், சிங்கத்தாக்குறிச்சி, காசிலிங்கபுரம், நயினார்புரம், கல்லாமொழி, அரசு பொது மருத்துவமனை - திருச்செந்தூர், அரசு பொது மருத்துவமனை - காயல்பட்டினம், விசாலாட்சி அம்மன் கோவில் தெரு, மழவராயநத்தம், பூச்சிக்காடு, அரசு பொது மருத்துவமனை - கோவில்பட்டி, சாத்துரப்ப நாயக்கன்பட்டி, உசிலம்பட்டி, திப்பணூத்து, சின்னமலைக்குன்று, நாவலக்கம்பட்டி, மேலசெய்தலை, கீழசெய்தலை, ஜெகவீரபாண்டியபுரம், கே. சுப்ரமணியபுரம், சொக்கலிங்கபுரம், கல்யாணிபுரம், மும்மலைபட்டி, ஓட்டுடன்பட்டி, வடக்கு வண்டானம், கே.குமாரபுரம் மற்றும் அயன்செங்கல்படை, மந்திக்குளம், பூசனூர் மற்றும் வடமலைசமுத்திரம், மார்தாண்டம்பட்டி, புளியன்குளம் மற்றும் அரசன்குளம், ராமநாதபுரம், ராமசந்திரபுரம் மற்றும் P.கெட்சிலாபுரம், மாசார்பட்டி ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Updated On: 9 July 2021 6:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்