/* */

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.. 3 பேர் கைது..

தூத்துக்குடி அருகே சூரங்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.. 3 பேர் கைது..
X

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை மூட்டைகள்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பல்வேறு தனிப்படைகளை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகிறார். மாவட்டத்தில் எந்தப் பகுதியிலாவது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலோ, பதுக்கி வைத்திருந்தாலோ காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, விளாத்திகுளம் காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மேற்பார்வையில், சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையில் உதவி ஆய்வாளர் சுந்தரம், குளத்தூர் காவல் நிலைய முதல் காவலர் கொடிவேல், சூரங்குடி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸார் வேம்பார் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் பாலம் அருகே அவர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது, அந்த காரில் ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்தவர்களான சீனி முஹம்மது மகன் அப்துல் அலி (52), கிறிஸ்டியன் மகன் கேப்ரியல் (34) மற்றும் காசிம் மகன் அஜ்மீர் காஜா (38) ஆகிய 3 பேரும் சட்டவிராத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களை சூரங்குடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றநர். விசாரணைக்குப் பிறகு அப்துல் அலி, கேப்ரியல் மற்றும் அஜ்மீர் காஜா ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

மேலும், கைதான 3 பேரிடம் இருந்த 90,000 ரூபாய் மதிப்பிலான 11,250 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடேய, மாவட்டம் முழுவதும் போதைப் பொருள் கடத்தல், மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தல், பதுக்கி வைத்தல் போன்ற சம்பங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்டத்தில் இதுவரை, போதைப் பொருட்கள், புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக 42 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Nov 2022 11:01 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  2. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  4. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  8. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  10. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...