/* */

ஊரடங்கு- மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் காய்கறி விற்பனை-கனிமொழி எம்பி

தூத்துக்குடி ஊரடங்கு - மக்களை காக்க மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் காய்கறி விற்பனை-எம்பி,அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

HIGHLIGHTS

ஊரடங்கு- மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் காய்கறி விற்பனை-கனிமொழி எம்பி
X

மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் காய்கறி விற்பனை-கனிமொழி எம்பி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் காய்கறி விற்பனை-கனிமொழி எம்பி அமைச்சர்கள் கீதாஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்


கொரோனா முழு ஊரடங்கு அறிவிப்பையொட்டி பொது இடங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக மகளிர் குழுக்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதைத்தொடர்ந்து மறவன்மடம் மகளிர் கூட்டமைப்பு சார்பில் வாகனம் மூலமாக நடமாடும் காய்கறி விற்பனை செய்யும் பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் தலைமையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நடமாடும் காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்து உள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய பொருள் தேவைகளுக்காக நாளை மட்டும் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே பொருட்கள் தேவை காரணமாக பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக நடமாடும் காய்கறி வாகன சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இவை மக்கள் இருக்கும் இடங்களுகக்கே சென்று காய்கறி, மீன், இறைச்சி ஆகியவற்றை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அணைத்து பகுதிகளிலும் நடமாடும் காய்கறி வாகன சேவையை கொண்டு சேர்க்க தூத்துக்குடி மாவட்டத்தில் 9262 மகளிர் சுயஉதவிக்குழுக்களை பயன்படுத்தி விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 22 May 2021 3:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?