/* */

தூத்துக்குடியில் முக கவசம் அணியாத 733 பேர் மீது நடவடிக்கை

தூத்துக்குடியில் முகக்கவசம் அணியாத 733 பேர் மீது நடவடிக்கை பாய்ந்தது. அவர்களுக்கு 1 லட்சத்து 46 ஆயிரத்து 600 ரூபாய் அபாராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமையான நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாத 733 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.1,46,600/- அபராதம், மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 9 பேருக்கு ரூ. 4500/- அபராதமும் காவல்துறையினரால் விதிக்கப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ. 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ. 500/- அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 228 பேர், ஊரக உட்கோட்டத்தில் 51, திருச்செந்தூர் 20, ஸ்ரீவைகுண்டம் 42, மணியாச்சி 104, கோவில்பட்டி 153, விளாத்திகுளம் 102, சாத்தான்குளத்தில் 33 பேர் என மொத்தம் 733 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 1,46,600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத தூத்துக்குடி நகர உட்கோட்டம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், திருச்செந்தூர், மணியாச்சி, கோவில்பட்டி தலா 1 நபர் என மொத்தம் 9 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.4000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 May 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு