/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு…

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு…
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் போலீஸார் அவர்களை சிறையில் இருந்து வெளியே வராதபடி இருக்க குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டில் இதுவரை 229 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பொன்னம்மாள் (45) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாள் மற்றும் கம்பால் தாக்கி கொலை செய்த வழக்கில் கைதான ஸ்ரீவைகுண்டம் ஆதிச்சநல்லூர் பகுதியை சேர்ந்த மூக்கன் மகன் இசக்கிப்பாண்டி (32) மற்றும் சிலரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இதேபோன்று கடந்த 1.10.2022 அன்று சாத்தான்குளம் மகாராஜா கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் சந்திரகாந்த் (26) என்பவரிடம் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்த வழக்கில் செய்துங்கநல்லூர் சிவனனைந்த பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மலையாண்டி மகன் சுடலைமுத்து (23) என்பவரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்குகளில் கைதான இசக்கிப்பாண்டி மற்றும் சுடலைமுத்து ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

இதேபோல, கடந்த 4.10.2022 அன்று கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு செட்டிக்குறிச்சி, மஞ்சநம்பி கிணறு பகுதியை சேர்ந்த அழகுதுரை (28) என்பவரை மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் தென்காசி மாவட்டம் கே. கரிசல்குளம் பகுதியை சேர்ந்தவர்களான மாடசாமி என்ற மாடக்கண்ணு மகன் பட்டுராஜ் (29), அங்கையற்கண்ணி மகன் நாகராஜன் (38), கடல் என்ற மருதுபாண்டியன் மகன் முருகன் என்ற பாலமுருகன் (29), கொடுங்கால பாண்டியன் மகன் மாரியப்பன் என்ற ஸ்டாலின் (31) மற்றும் கயத்தாறு மஞ்சநம்பிகிணறு பகுதியை சேர்ந்த சின்ன குருசாமி மகன் கனகராஜ் (33) ஆகியோரை கயத்தாறு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இதில், பட்டுராஜ், நாகராஜன், முருகன் என்ற பாலமுருகன், மாரியப்பன் என்ற ஸ்டாலின் மற்றும் கனகராஜ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், ஸ்ரீவைகுண்டம் ஆதிச்சநல்லூர் பகுதியை சேர்ந்த மூக்கன் மகன் இசக்கிப்பாண்டி, செய்துங்கநல்லூர் சிவனனைந்த பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மலையாண்டி மகன் சுடலைமுத்து, தென்காசி மாவட்டம் கே. கரிசல்குளம் பகுதியை சேர்ந்தவர்களான மாடசாமி என்ற மாடக்கண்ணு மகன் பட்டுராஜ், அங்கையற்கண்ணி மகன் நாகராஜன், கடல் என்ற மருதுபாண்டியன் மகன் முருகன் என்ற பாலமுருகன், கொடுங்கால பாண்டியன் மகன் மாரியப்பன் என்ற ஸ்டாலின் மற்றும் கயத்தாறு மஞ்சநம்பிகிணறு பகுதியை சேர்ந்த சின்ன குருசாமி மகன் கனகராஜ் ஆகிய 7 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் 7 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போக்ஸோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 38 பேர் உட்பட 229 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

Updated On: 4 Nov 2022 5:08 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...