/* */

ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தால் பணிகள் பாதிப்பு

திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடியதால் பணிகள் பாதிப்படைந்துது.

HIGHLIGHTS

ஒப்பந்த  ஊழியர்கள் போராட்டத்தால்  பணிகள் பாதிப்பு
X

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

மருத்துவமனையை சுத்தப்படுத்துவது, நோயாளிகளை இடம்மாற்றுதல் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளையும் உறவினர்களையும் ஒழுங்குபடுத்துவது, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கொரனோ காலத்திலும் விடுமுறையின்றி பணிபுரியும் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், துப்புறவு தொழிலாளர்களுக்கு 6900 ரூபாயும், பாதுகாவலருக்கு 7900 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்,

பணி பாதுகாப்பு, கொரனோ காலத்தில் பணிபுரிந்து உயிரிழந்த தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திடிரென பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த பணியாளர்கள் மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் மருத்துவக்கல்லுரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் மருத்துவ பணிகள் இரண்டு மணிநேரம் பாதிக்கப்பட்டது.

Updated On: 19 May 2021 11:30 AM GMT

Related News