/* */

திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு

திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு
X

அதிமுக உட்கட்சி தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான இரா. காமராஜ் பெயரில் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக இணைந்து வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், மீண்டும் மாவட்ட செயலாளராக இரா.காமராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் முதல் முறையாக இன்று திருவாரூர் வருகை தந்தார். அவருக்கு அதிமுகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தொண்டர்கள் இருசக்கர வாகனம் புடைசூழ முன்னாள் அமைச்சரை திருவாரூர் நகர பகுதியில் அழைத்து சென்றனர். பின்னர் முன்னாள் அமைச்சர் காமராஜ் அண்ணா சிலைக்கும், புதுத் தெருவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் நகர செயலாளர் ஆர்.டி. மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் பி.கே.யு.மணிகண்டன், செந்தில்வேல், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 30 April 2022 3:05 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  2. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  3. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  4. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  8. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  9. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...