/* */

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்

நீட் விலக்கு மாசேதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்

HIGHLIGHTS

நீட்  விலக்கு மசோதாவை திருப்பி  அனுப்பிய ஆளுநருக்கு ஆதரவாக  கையெழுத்து இயக்கம்
X

மாவட்ட கட்சி அலுவலத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த இந்து மக்கள் கட்சி இளைஞரணிமாநில செயலாளர் ஜெ.சுவாமிநாதன்

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு கோரிய மசோதாவை தமிழக ஆளுநர் ரவி குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில். இந்து மக்கள் கட்சி இளைஞரணி சார்பில் இன்று திருவாரூரில் நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்தும் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தும் ஒரு மாதம் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார்.

மாவட்ட கட்சி அலுவலத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தபின், மாநில செயலாளர் ஜெ.சுவாமிநாதன் பேசியதாவது: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தமிழகத்திற்க்கு நீட் தேர்வு அவசியம் என்றும் தமிழக அரசு நீட் தேர்வை எதிர்ப்பதை கைவிட வேண்டும். இன்று தொடங்கப்பட்ட இந்த நீட் ஆதரவு கையெழுத்து இயக்கமானது ஒரு மாதம் நடைபெறும் என்றும், நீட் தேர்வின் அவசியம் குறித்து நகர பகுதி மட்டுமில்லாத கிராமப்புறவு மாணவர்களுக்கும் எடுத்துக் கூறி அவர்களிடம் ஆதரவு கையெழுத்தை பெற்று தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இநிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு நீட்டுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர்.

Updated On: 9 Feb 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  4. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  5. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  6. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  7. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  8. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு