/* */

திருவாரூரில் உடனடி பணி வழங்க கோரி செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம்

திருவாரூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க கோரி செவிலியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்.

HIGHLIGHTS

திருவாரூரில் உடனடி பணி வழங்க கோரி செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம்
X

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவிலியர் சங்கத்தின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

கொரோனா பேரிடர் காலத்தில் ஆபத்தான சூழ்நிலையில் பணிபுரிந்த செவிலியர்கள் மற்றும் ஈசிஜி டெக்னீஷியன்கள் கடந்த மாதம் 31 ஆம் தேதியோடு தமிழக அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்த செவிலியர்கள் மற்றும் ஈசிஜி டெக்னீசியன்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செவிலியர் சங்கத்தின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட செவிலியர்கள் மற்றும் ஈசிஜி டெக்னீசியன்கள் கொரோனா காலத்தில் பணியில் சேர்ந்த தங்களை பணி நிரந்தரம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசு தற்போது எங்களை பணி நீக்கம் செய்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனவே உடனடியாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல தங்களுக்கு பணி வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 6 April 2022 1:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?