/* */

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டுவருகிறது. அந்தவகையில் தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமுடன் முகாம்களுக்கு வந்து தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர். அதேபோல், கொரோனா தடுப்பூசி தொடர்பாக பல்வேறு வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம், நிலையான தடுப்பூசி முகாம், மருத்துவமனைகள் என பல்வேறு வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை எளிதாக்கி, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இதுவரை முதற்கட்ட கொரோனா தடுப்பூசியாக 6,63,972 நபர்களுக்கும், இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசியாக 3,11,762 நபர்களுக்கும் என மொத்தம் 975734 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கீழவீதியிலுள்ள திருவாரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் இயங்கிவரும் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து குடிமை பொருள்களின் பாதுகாப்பு மற்றும் எடை இயந்திரம் உள்ளிட்டவற்றை சோதனை செய்தார்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், மாவட்ட வழங்க அலுவலர் கீதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Nov 2021 2:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?